பழைய மாணவர் சங்கம்

emailபழைய மாணவர் சங்கம் மறவன்புலோ

 

 

உங்கள் தொடர்புகளுக்கும்
உங்கள் தகவல்களை அனுப்புவதற்குக்கும்
மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம்
மறவன்புலோ
சாவகச்சேரி
இலங்கை
maravanpulo@yahoo.com
தலைவர் :- யோ.ஜெயகாந்தன் (அதிபர்)
தொலைபேசி எண் 0094779580815

jeyakanthan
செயலாளர் :- சி.சிவாகுலன் (முரளி)

தொலைபேசி எண் 0094773993945

sivakulan

உபசெயலாளர் :- க.துஷ்யந்தன்
தொலைபேசி எண் 0094776589402

thusyanthan

பொருளாளர் :- இ.சிவரூபன் (ரூபன்)
தொலைபேசி எண் 0094759485383

sivaruban

 

 

கணக்காய்வாளர் சி.ஜெயந்தி

தொலைபேசி எண்

DSCN2764-1
சர்வதேச  கிளை சங்கம்

தலைவர் -சட்டநாதர் மனோகரன்

தொலைபேசி எண்-00331607912446266

Untitled-1 copy

உபதலைவர்-செல்லக்கிளி ஆனந்தராஜன்

தொலைபேசி எண்

பொருளாளர்-சச்சிதானந்தம் பால்ராஜ்

தொலைபேசி எண்-004915218496767

bajaraj

செயலாளர் -கனகரத்தினம் தனேந்திரன்

தொலைபேசி எண்-0041768199093

thanenthiran

உபசெயலாளர்-இரகுநாதன் சர்வேந்திரன்

தொலைபேசி எண்-00393932209858

sarventhiran
பழையமாணவர் சங்கம்

 

பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச கிளை அங்குராய்பண அறிக்கை.

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச கிளையினை தோற்றுவிப்பதற்கான கூட்டம் சங்கத்தின் தலைவர் திரு.யோ.ஜெயகாந்தன் தலைமையில் (08.08.2012) அன்று பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவரும் பாடசாலை அதிபருமான திரு.யோ.ஜெயகாந்தன் பாடசாலையின் பௌதீக வழங்களை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டுவரும் பழைய மாணவர் சங்கம் அவற்றின் பாதுகாப்பினை உறுதி செயற்வதற்கான செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனக்குறிப்பிட்டார். எனவே இங்கு பணியாற்றும் காவலாளியின் ஊதியம் தொடர்பிலும் சங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் பின்னராக சர்வதேச கிளையொன்றினை ஏற்படுத்தி அதன் மூலம் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம் என்ற ஆலோசனைக்கு அமைவாக நிர்வாக உறுப்பினர்கள் கூட்டாக வெளிநாட்டு கிளை உறுப்பினர்களை தெரிவு செய்தனர். தற்போது எம்மோடு தொடர்பில் இருந்து சங்கத்தின் வளர்சியில் பங்கெடுப்பவர்களை ஓர் அங்கமாக கொண்டு இதனை முன்னெடுப்பது எனவும் மேலும் இணைபவர்கள் குறித்து பின்னர் கவனம் செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அமைய தலைவராக சட்டநாதர் மனோகரன் அவர்களையும், உபதலைவராக செல்லக்கிளி ஆனந்தராஜன், பொருளாளராக சச்சிதானந்தம் பால்ராஜ், செயலாளராக கனகரத்தினம் தனேந்திரன், உபசெயலாளராக இரகுநாதன் சர்வேந்திரன்.  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் மேலும் இந்நிர்வாகத்தினை மறுசீரமைப்பது தொடர்பில் தாய்சங்கம்  தம்மாலான பல முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சி.சிவாகுலன் (முரளி)
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
இலங்கை.

யாஃமறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய பழையமாணவர்சங்க
அங்குரார்ப்பண கூட்ட அறிக்கை 17.02.2011
மறவன்புலோ
சகலகலாவல்லி வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்து
வைக்கும் கூட்டம் 17.02.2011 வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பாடசாலை
அதிபர் மதிப்பிற்குரிய திரு.யோ.ஜெயகாந்தன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது
பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகள், அது பாடசாலையை
அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்ல மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,
சங்கம் திறம்பட செயற்பட்டு சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய சேவைகள் தொடர்பான
கருத்துரையினை பாடசாலையினை ஆசிரியர் நடேஸ்வரன் வழங்கினார். இதன் பின்னதாக
பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

பழைய
மாணவர் சங்கத்தின் தலைவராக பாடசாலை அதிபரே செயற்படுவார் என கல்வித்
திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்டதன் காரணமாக அதிபரை தலைவராக கொள்வதென
ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதன் பின்னராக உபதலைவராக திருஞானசம்பந்தர் விமலதாஸ் அவர்களை இ.சிவரூபன் முன்மொழிய, மா.ராஜீவன் அதனை வழிமொழிந்தார்.
செயலாளராக சிவராசா சிவாகுலனை இ.இராசமாலினி முன்மொழிய செ.சாருமதி அதனை வழிமொழிந்தார்.
இணைச் செயலாளராக கனகரத்தினம் துஸ்யந்தனை இ.சிவரூபன் முன்மொழிய பி.புஸ்பமாலா அதனை வழிமொழிந்தார்.
பொருளாளராக .இ.சிவரூபன் அவர்களை மா.ராஜசிறி முன்மொழிய தி.விமலதாஸ் அதனை வழிமொழிந்தார்.
இணைப்பொருளாளராக தா.மைதிலியை செ.செல்வரஞ்சினி முன்மொழிய தி.விமலதாஸ் அதனை வழிமொழிந்தார்.
கணக்காய்வாளராக மாணிக்கவாசகர் ராஜீவனை தி.அஜந்தன் அவர்கள் முன்மொழிய தா.மைதிலி அதனை வழிமொழிந்தார்.
சங்கத்தின் போசகராக மதிப்புக்குரிய ஆசிரியர் திருமதி சிவகலா ஞானசேகரம் அவர்களை இ.கோகுலன் முன்மொழிய தி.அஜந்தன் அதனை வழிமொழிந்தார்.
இதன்
பின்னர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது இதற்கு அமைய
தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த செ.செல்வரஞ்சினி, ச.துஸ்யந்தி மறவன்புலோ
கிழக்கு பகுதியைச் சேர்ந்த தி.அஜந்தன், அ.தவராசா, மறவன்புலோ மேற்கு
பகுதியைச் சேர்ந்த இ.சுபாசினி, இ.சிவராஜினி, மறவன்புலோ வடக்கு பகுதியைச்
சேர்ந்த சந்திரமதி, ஹேதாகரன் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்டனர். பின்னராக பழைய
மாணவர் சங்கத்தினை சர்வதேசத்தில் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களுடன்
இணைப்பது, சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள்,
மற்றும் விளம்பரங்களை வெளியிடுவது, இணையத்தளப் பராமரிப்பு போன்ற விடயங்களை
மேற்கொள்வதற்காக க.துஸ்யந்தன், சி.சிவாகுலன், மா.ராஜீவன் ஆகியோர் கூட்டாக
தற்காலிகமாக செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
நிர்வாக
தெரிவு இடம்பெற்றதன் பின்னர் உரையாற்றிய சங்கத்தின் தலைவரும் பாடசாலை
அதிபருமான மதிப்பிற்குரிய திரு.யோ.ஜெயகாந்தன் அவர்கள் யுத்தத்தின் பின்னர்
முற்றாக அழிவடைந்திருந்த பாடசாலை தற்போது சுவிஸ் நாட்டு அரசாங்கத்தின்
அனுசரணையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டப்பட்டுள்ள
பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறங்களை பராமரிப்பது தொடர்பில் பழைய
மாணவர் சங்கம் தம்மாலான அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்
எனக்கேட்டுக்கொண்டார். மேலும் எதிர்வரும் வாரத்தில் பாடசாலையின்
மெய்வல்லுனர் போட்டியினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதனை
திறப்பட நடாத்தி முடிப்பதற்கான வேலைத்திட்டங்களை பாடசாலையின் இந்த பழைய
மாணவர் சங்கம் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பாடசாலையின் பழைய
மாணவர்கள் இருவரினால் மைதானம் மெருகூட்டப்பட்டதனை சுட்டிக்காட்டிய அவர்
மைதானத்தில் மேலும் காணப்படும் குறைபாட்டினை விரைவில் நிவர்த்தி செய்து
மெய்வல்லுனர் போட்டியினை நடாத்துவதற்கு பழைய மாணவர் சங்கம் செயற்படவேண்டும்
எனக் குறிப்பிட்டார். மேலும் புதிதாக 10 வருடங்களின் பின்னர்
ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை என்பதனால் மெய்வல்லுனர் போட்டியினை
நடாத்துவதற்கு பாரிய நிதி தேவைப்படுவதாகவும் அதனை பாடசாலைக்கு உட்பட்ட
பகுதியிலேயே அல்லது வேறு இடங்களிலேயோ பணமாகவோ, பொருளாகவோ திரட்டுவதற்கான
வேலைத்திட்டங்களை பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என
ஆலோசனை வழங்கினார். அதிபரின் இம்முடிவினை ஏகமனதாக ஏற்றுக்கொண்ட சங்கத்தின்
நிர்வாக உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் அதற்கான முயற்சியினை துரித
கதியில் மேற்கொள்வதாக ஏகமனதாக ஒப்புக்கொண்டனர்.
இதன்
பின்னராக உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் திரு.சி.சிவாகுலன் அவர்கள்
சங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதன் செயற்பாடுகளின் வேகத்தினை
வெளிப்படுத்துவற்கும் சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும்
ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் சங்கத்தில்
அங்கத்தவர்களாக சேரும் ஒவ்வொரு பழைய மாணவனும் மாதாந்தமாகவோ அல்லது
வருடாந்தமாகவோ சங்கத்திற்கு சந்தா செலுத்துவதனை தமது கடமையாக கொண்டிருக்க
வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் சர்வதேசத்தில் வாழும் எமது பாடசாலை
பழைய மாணவர்களுடன் விரிவான தொடர்புகளை பேணுவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கு பழைய மாணவர் சங்கத்தில் அங்கம் வகிக்கும்
அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு பெறப்படவேண்டும் என கேட்டுக்கொண்டு
தனது உரையினை நிறைவு செய்தார்.
இதன் பின்னதாக பழைய
மாணவர் சங்கத்தின் போசகரும் ஆசிரியருமான மதிப்பிற்குரிய திருமதி சிவகலா
ஞானசேகரம் அவர்கள் உரையாற்றினார்;. அவர் தனது உரையில் இப்பாடசாலையில் தமது
ஆசிரியர் சேவையினை முதல் முதலாக ஆரம்பித்ததாகவும் அதன் போது தமக்கு ஏற்பட்ட
அனுபவங்கள் பாடசாலை எவ்வாறு திறப்பட செயற்பட்டது. பாடசாலைக்கு இந்த பிரதேச
மக்கள் எவ்வாறு தமது சேவையினை வழங்கினார்கள் அப்போது இப்பாடசாலை சகல
துறைகளிலும் எவ்வாறு முன்னின்று செயற்பட்டது போன்ற தமது அனுபவங்களை
தெரிவித்ததுடன் மீண்டும் இப்பாடசாலையில் தாம் கல்வி கற்பிப்பதற்கும்
சேவையாற்றுவதற்கும் விரும்புவதாக குறிப்பிட்டார். மேலும் பாடசாலையின்
அபிவிருத்தி, மாணவர் வரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சங்கம்
உன்னிப்பாக தமது கவனத்தினை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இத்துடன் இனிதே இக்கூட்டம் நிறைவு பெற்றது.

 

…………….. ……………….. ……………….
தலைவர் செயலாளர் பொருளார்
மெய்வல்லுனர்
போட்டியினை நடாத்துவது தொடர்பாக பழையமாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச்
சங்கத்தினை ஒன்றினைத்து நடாத்திய கூட்டம் 24.02.2011 அன்று பாடசாலை
மண்டபத்தில் நடைபெற்றது.
ஒரு நிமிட மௌனஅஞ்சலியுடன்
கூட்டம் ஆரம்பமானது இதன் பின்னர் பாடசாலை முதல்வரும் சங்கத்தின் தலைவருமான
ஜெயகாந்தன் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் எஸ்டிசி பாடசாலைக்கு
வழங்கியுள்ள மாபெரும்சேவைகள் அதனை நாம் பராமரிக்க வேண்டியதன் அவசியம்
என்பனவற்றை விளக்கியதுடன் மெல்வல்லுனர் போட்டி நிகழ்விற்கான பிரதமர்
விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை தெரிவு செய்யும்
தீர்மானங்களையும் வெளியிட்டார். நிகழ்வினை நடாத்துவதற்கான பணத்தினை பாடசாலை
பழையமாணவர் சங்கம் எமது பிரதேச மக்களிடமிருந்து சேகரித்துக் கொள்ளும் எனத்
தெரிவித்தார்.
இதன் பின்னராக நிதிசேகரிப்பதற்கு பிரதேச ரீதியாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்குப்
பகுதிக்கு கவிதா, மாலினி, சாருமதி ஆகியோரும், மத்தி பகுதிக்கு
ஆனந்தரஞ்சன், சுபாசினி, சிவராஜினி, வினோஜினி, ஆகியோரும் மேற்கு பகுதிக்கு
கந்தையா, மைதிலி, குமார் ஆகியோரும் வடக்கு பகுதிக்கு பிரியதர்சினி ஆகியோர்
தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்விற்கான குளிர்பான
வசதியினை மீள் எழுச்சித்திட்டம் வழங்க முன்வந்ததுடன் மலர் மாலைகளை வெண்மை
வாணிபர் சங்கம் வழங்க முன்வந்தது. விவசாய சம்மேளனம் வடை மற்றும் பிஸ்கட்
ஆகியவற்றையும் இராணுவத்தின் 523வது படைப்பிரிவின் 11வது விஜயபாகு பிரிவு
200 றோல் மற்றும் வாழைப்பழம் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர்வசதியினையும்
ஏற்படுத்த முன்வந்திருந்தன. நிகழ்விற்கான ஒலிபெருக்கி வசதியினை முரளி
வழங்க முன்வந்ததுடன் ஆசனங்களை மறவன்புலோ சனசமூக நிலையம், கிராமிய
அபிவிருத்தி அமைப்பு, மீள்எழுச்சித்திட்டம் ஆகியன வழங்க முன்வந்தன.
இந்தன்
பின்னராக உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் சிவாகுலன் மெய்வல்லுனர்
போட்டியினை திறம்பட நடாத்துவதற்கு எமது சங்கம் முழுமூச்சுடன் செயற்படும்
என்;றும் சங்கத்தினால் சேகரிக்கப்படும் நிதி மற்றும் செலவு தொடர்பான
விடயங்களை மெய்வல்லுனர் போட்டியின் முடிவில் மக்கள் பார்வைக்கு விடுவது
தொடர்பான விடயங்களை பொருளார் சிவரூபன் மற்றும் கணக்காய்வாளர் ராஜீவன்
ஆகியோர் மேற்கொள்வார் என்றும் குறிப்பிட்டார். இத்தீர்மானங்களுடன் கூட்டம்
இனிதே நிறைவு பெற்றது.
பழைய மாணவர் சங்கத்த்தின்
ஏற்பாட்டில் இன்று 28.02.2011 நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு
பொருட்களாகவோ அல்லது பணமாகவோ மற்றும் வேறு வகையிலோ உதவி வழங்கியோர் விபரம்.
01.
எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் பழைய மாணவர் சங்கத்தின் போசகருமான
திருமதி.சிவகலா ஞானசேகரம் அவர்கள் ஒரு தொகை வெற்றிக்கிண்ணங்களை அன்பளிப்பாக
வழங்கியிருந்தார்.

 

02. எமது பாடசாலையின் பழைய மாணவன் செல்வன் சூரியகுமார் ராகுலன் சுமார் 4 ஆயிரம் பெறுமதியான வெற்றிக்கிண்ணங்களை வழங்கியிருந்தார்.
03. எமது பாடசாலையின் பழையமாணவன் திருஞானசம்பந்தர் விமலதாஸ் அவர்கள் பாடசாலைக்கான ஒலிம்பிக்பீடத்தினை வழங்கியுள்ளார்.
04.
எமது பாடசாலையின் பழைய மாணவனும் பிரதேச செயலகத்தில் தற்போது பணிபுரிவருமான
எஸ்.கேதாகரன் பாடசாலைக்கான வெற்றிப்பீடத்தினை வழங்கியுள்ளார்.
05.
எமது பாடசாலையின் பழைய மாணவன் இ.சிவரூபன் அவர்கள் பேச்சு மேசை மற்றும்
ஒலிம்பிக்தீபம் என்பனவற்றினை பாடசாலைக்கு அன்;பளிப்பாக வழங்கியுள்ளார்.
06. எமது பாடசாலையின் பழைய மாணவி இ.சுபாசினி மைதானத்தினை அலங்கரிப்பதற்கான கொடிகளை வழங்கியிருந்தார்.
07. எமது பாடசாலையின் பழைய மாணவி திருமதி ரேணுகா அவர்கள் மைதானத்தினை மேலும் அழகுபடுத்துவதற்கான கொடிகளை வழங்கியிருந்தார்.
08.
எமது பாடசாலையின்; பழைய மாணவனும் தற்போது பூநகரி நல்லூர்
மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றுபவருமான க.துஸ்யந்தன் அவர்கள்
சுமார் 4 ஆயிரம் பெறுமதியான வெற்றிக்கேடயங்களை அன்பளிப்பு செய்திருந்தார்.
09. எமது பாடாசாலையின் பழையமாணவி சி.அரசதீபா அவர்கள் ஒரு தொகை பயிற்ச்சிப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
10.
எமது பாடசாலையின் நலன்விரும்பியும் பாடசாலையின் பழைய மாணவர்களுமான சரணபவன்
மற்றும் அவரது புதல்வர்கள் மெய்வல்லுனர் போட்டி நிகழ்விற்கான அலங்காரப்
பந்தலில் ஒரு பகுதியினை இலவசமாக வழங்கியிருந்தனர்.
11.
பெயர்குறிப்பிடவிரும்பாத மறவன்புலோ கிழக்கைச் சேர்ந்த பழைய மாணவர் ஒருவர்
பிரதான மண்டபத்தில் ஒரு தொகுதி பந்தலினை இலவசமாக வழங்கியிருந்தார்
அவருக்கும் எமது நன்றிகள்.
12. எமது பாடசாலையின் பழைய
மாணவன் சி.முரளி அவர்கள் மெய்வல்லுனர் போட்டிக்கான ஒலி மற்றும் ஒளி ஏனைய
ஏற்பாடுகளுக்கான வாகனவசதி ஆகியவற்றை இலவசமாக வழங்கியிருந்தார்.
13 ஓய்வுபெற்ற அதிபர் மதிப்பிற்குரிய பத்மநாதன் வெற்றிக்கேடயத்தினை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
14. மறவன்புலோ மேற்கைச் சேர்ந்த இ.கையிலாயபிள்ளை வெற்றிக்கேடயத்தினை வழங்கியிருந்தார்.
15. மங்கள இசையினை கலைஞானகேசரி து.மாணிக்கவாசகர் இலவசமாக வழங்கியிருந்தார்.
இதனை
விட மறவன்புலோ கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பொது
அமைப்புக்களும் தம்மாலான உதவிகளை பழையமாணவர் சங்கம் ஊடாக மெய்வல்லுநர்
போட்டிக்கு வழங்கியிருந்தன.
ஏ. மறவன்புலோ கிராமிய அபிவிருத்தி அமைப்பினர் மெய்வல்லுனர் போட்டிக்கான குளிர்பான வசதிகளை ஏற்படுத்தி வழங்கியிருந்தனர்.
பி. மறவன்புலோ வெண்மை வாணிபர் சங்கத்தினர் விருந்தினர்களுக்கான மலர்மாலைகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்.
சி. மறவன்புலோ விவசாய சம்மேளனத்தினர் மெய்வல்லுனர் போட்டி நிகழ்விற்கான சிற்றுண்டிகளில் ஒரு தொகுதியினை வழங்கியிருந்தனர்.
டி.
.இதேபோன்று இராணுவத்தின் 523வது பிரிகேட் கொமாண்டர் போட்டிக்கான ஒரு
தொகுதி சிற்றுண்டி வகைகளை வழங்கியதுடன். மைதானத்தினை அழகு படுத்துவதற்கான
கொடிகளை நாட்டுவதற்கான கம்பங்களை வழங்கியிருந்தார். மேலும் இன்றய
நிகழ்விற்கான தண்ணீர் வசதியினையும் ஏற்பாடு செய்து தந்திருந்தார்.
ஈ. மறவன்புலோ மேற்கு சனசமூக நிலையத்தினர் மெய்வல்லுநர் போட்டிக்கான கதிரையில் ஒரு தொகுதியினை இலவசமாக வழங்கியிருந்தனர்.
எவ்.
மறவன்புலோ கிராம முன்னேற்ற சங்கத்தினர். மெய்வல்லுனர் போட்டிக்கான ஒரு
தொகுதி கதிரையினை இலவசமாக வழங்குவதாக இருந்தனர் அவர்களுக்கும் எமது
நன்றிகள்.
இதற்கு மேலாக அழிவடைந்த நிலையில் காணப்பட்ட
இப்பாடசாலையின் மைதானத்;தை துப்பரவு செய்து புனரமைக்கும் வேலைகளில் தமது
உழவியந்திரங்களை இலவசமாக பயன்படுத்தியோர்.
சி.திருஞானசம்பந்தர்.
தி.ரமேஸ்குமார்.
க.சிவராசா (மோகன்.)
மெய்வல்லுனர்
போட்டியின் தேவைக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் கதிரைகள் பந்தல்கள்
உள்ளிட்ட பொருட்களை ஏற்றுவதற்கு சி.ஜெயானந்தராசா (ஆனந்தி) அவர்கள்
உதவிபுரிந்திருந்தார்.
மேலும் இவ்மெய்வல்லுனர் போட்டியினை
படப்பிடிப்பு செய்து கொண்டிருக்கும் நல்லூர் நரேன் வீடியோ ஸ்தாபனத்தின்
உரிமையானர் நரேந்திரராஜா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இவற்றிற்கும்
மேலாக இம்மெய்வல்லுனர் போட்டிக்கான பாரிய நிதியினை பெற்றுக்கொள்வதற்கு
சகலவழிகளிலும் உதவிபுரிந்த எமது பழையமாணவர் சங்கத்தின் அங்கத்தவர்கள்
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

new copy

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme