தீபாவளி என்றால் என்ன?

தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

deepavali song

10-11-2015 செவ்வாய் கிழமையன்று அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் குளிக்க வேண்டும். காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும்.
இதற்கு பல கதைகள் இருந்தாலும் சிலவற்றை இங்கு காண்போம். நரகாசுரன் என்ற அரக்கன் பல துன்பங்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் செய்து வந்தான். இதனால் சிவன் மகா விஷ்னுவிடம் அவனை கொள்ளும்படி கூறினார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். போரின் பொழுது நரகாசுரன் எய்த அம்பு பட்டு மயங்கியது போல் நடித்தார் விஷ்ணு. இதனால் கோபம் கொண்ட சத்ய பாமா அவனை போருக்கு அழைத்து அம்பு எய்து கொன்றார். சத்ய பாமா தன் தாயின் பூமியின் அவதாரம் என்று தெரியாமல் போரிட்டு இறந்த போனான் நரகாசுரன். அவன் இரக்கும் தருவாயில் அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு, பலகாரம் உண்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். அதன் தொடர்ச்சியாகவே தீபாவளி பலகாரம் வந்தது. அதுவே இன்று தீபாவளி ஆனது. ஆனால் வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு,  இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.

for dewali

நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.
தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.

Updated: November 9, 2015 — 7:02 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme