எஸ்டிசி நிறுவன பிரதிநிதிகள் மறவன்புலோ வருகை.

SDC
யுத்தத்தால் நிர்க்கதியாகிய நிலையிலிருந்த எமது மறவன்புலோ மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வீடு,மலசலகூடம்,கிணறு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தினையும் ஏற்படுத்திக்கொடுத்த சுவிஸ்நாட்டின் எஸ்டிசி நிறுவனத்தினர் நேற்றயதினம் (16.01.2015) மறவன்புலோ பகுதிக்கு விஜயம் செய்து தம்மால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகள் மக்களுக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து ஆராய்ந்து சென்றனர்.
மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் மறவன்புலோ கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் அதன் நிர்வாக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது எஸ்டிசி நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் பலர் எதிர்வரும் நாட்களில் மறவன்புலோவை பார்வையிட வருகைதரவுள்ளதாவும் எனவே அதற்கான சில ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated: January 17, 2015 — 2:17 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme