தைபொங்கல் விழா மறவன்புலோவிலிருந்து நேரடி அஞ்சல்

professional-camera-girl-6030501தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நாளை உலகம் பூராகவும் வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் நிலையில் தமிழ் மக்களின் தாயகபூமியாம் யாழ் குடாநாட்டின் மறவன்புலோ கிராமத்தில் பாரம்பரிய முறைப்படியான பொங்கல் விழா கொண்டாடப்படவிருக்கிறது.

மறவன்வன்புலோ மத்தியில் அமைந்துள்ள வள்ளக்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நூற்றுக்கு மேற்பட்ட பானைகளில் பொங்கல் பொங்கி சூரிய தேவனுக்கு படைத்து நன்றி செலுத்தவுள்ளனர். நாளை காலை 9 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் பலநிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமிழ் மக்களின் பாரம்பரியங்களை எடுத்துக்காட்டும் இந்நிகழ்வினை உலகம் பூராகவும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் பார்வையிடுவதற்காக மறவன்புலோ சகலாவல்லி வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேரடி அஞ்சல் செய்யப்படவிருக்கிறது. றறற.அயசயஎயnpரடழ.உழஅ எனும் இணையத்தள தொலைக்காட்சி ஊடாக இந்நிகழ்வுகளை அனைவரும் கண்டு மகிழலாம்

Updated: January 14, 2015 — 7:56 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme