மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மைதானத்தினை பெருப்பிப்பதற்காக அருகில் காணப்பட்ட வயல் நிலத்தினை கொள்வனவு செய்வதற்கான பணிகளில் 50 வீதமான வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே சங்கத்தின் சர்வதேச கிளைகள் ஒன்றிணைந்து இதற்கான பணத்தினை சேகரிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் காணியினை அளவு செய்யும் வேலைத்திட்டம் கடந்த (11.01.2015) அன்று நடைபெற்றது. பழைய மாணவர்சங்கத்தின் தலைவரும் பாடசாலை அதிபருமான திரு.யோ.ஜெயகாந்தன், செயலாளர் சி.முரளி, பொருளாளர் இ.சிவரூபன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். மைதானத்திற்கான காணியினை கொள்வனவு செய்வதற்காக மேலும் பண உதவி தேவைப்படும் நிலையில் அதனை ஈடுசெய்வதற்கு புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களும் பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் முன்வர வேண்டும் என மீண்டும் மீண்டும் பழையமாணவர் சங்கத்தினராகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.