தூக்கமில்லா இரவொன்றில் துக்கத்துடன் போராடி இறுதியில் வீழ்ந்தேன் ஊரின் சில நினைவலைக்குள்.

குழந்தையாக இருந்தேன் ஏதும் நினைவில்லை.

பின்னர் சிறுவனாகினேன்.

ஓரளவு ஊரின் நினைவுகள்.

சிறுவர் பாடசாலையில் ஒருநாள் அழுத ஞாபகம்.

ka1

பக்கத்து வீட்டில்  பாடசாலைக் கல்வி.

ஆனாலும் என் வீட்டையே சுற்றி எனது மனம் என் செய்வேன் நான் ..

கதறி அழுதேன் ஆனபோதும் வீடு செல்ல முடியாத ஏமாற்றம்.

எனினும் எங்கள் ஊரின் நினைவுகளில் மூழ்கி ஏமாற்றத்தினைத் தடுக்கப் போராடினேன்.

ஒரு கூட்டு பறவைகள் போல் மறவன்புலோ பதிதனிலே பாசத்தோடு ஒன்றாக இணைந்திருந்தோம்.நாற்புறமும் இயற்கையின் அருங்கொடைகள்.பச்சை பசும் வயல் வெளிகள் அது மட்டுமா? அருகே கரையை முத்தம் இடும் கடல் அலைகள்.இத்தனை இயற்றை வளங்களையும் உள்ளடக்கிய மகத்தான எங்கள் மறவன்புலோ எனும் ஊர்.

ka2 ka3

இங்கு  பாசங்கு இல்லாமல் பாசமுடன் பழகும் பாசமுள்ள மனிதர்கள்.

கோவில்கள் குளங்கள், காடுகள் மணல் மேடுகள், எங்கும் பச்சைக் கம்பளம் விரித்தது போல பச்சைப் புல் நிலங்கள்.

மாலை ஆனதும் வயல் நிலங்களில் வயது வேறுபாடின்றி குதுகலமாய் கூடி கொஞ்சி விளையாடிய எம் ஊர் மக்கள்.

பழ மரங்களைத் தேடும் பறவைகள் போல நாவில் நீர் வடிய நாவல் மரங்களைச் சுற்றித்திரிந்த ஞாபகங்கள் அழியாமல் என்னுள்.

சகல கலைகலையும் கற்று தர காத்திருந்த எம் கலை கூடம். சகல கலா வல்லிவித்தியாலயம்.

எதிர் காலம் பற்றிய பல எதிர் பார்போடு எத்தனையோ கனவுகளுடன் எண்ணியே வாழ்ந்திருந்தோம் எம் ஊரில்.

உலகை உலுப்பிய யுத்தம் யாருமே எதிர்பார்க்காத நேரம் எங்கள் ஊருக்குள்ளும் புகுந்தது.ஆம் அன்று மார்கழி பன்னிரண்டு.

பொழிந்தது குண்டு மழை.அழிந்தது எம் வீடுகள் வயல்கள் சொத்துக்கள் மட்டும் அல்ல எதிர்பார்த்த வாழ்க்கையின் கனவுகளும்தான்.

கையில் அகப்பட்ட பொருட்களுடன் எல்லோரையும் போல நாமும் உயிரைக் கையில் பிடித்தபடி ஏதிலிகளாக ஊரைவிட்டு துரத்தப்பட்டோம்.

இன்று உடைந்த கட்டிடங்கள் தரை சரிந்து மரங்கள் புதர் வளர்ந்த வயல்கள் என எம் ஊர் பாலைவனம் போல.கல் நெஞ்சகாரனும் பார்த்தால் கண்ணீர் விட தோன்றும்.

ka4

எனினும் வேதனைகள் கூடிய வாழ்வு வெறுத்த நிலையில்இறைவன் செயலால் கூடி வந்தன மீள் குடியேற்றும் திட்டங்கள்.

வடக்கின் வசந்தம் எம் ஊரின் வாசல் வந்தது.இதனால் எம் ஊர் இன்று ஓரளவுக்கேனும் பசுமை போர்த்தி மீளத் துடிக்கின்றது.

தாகத்தோடு எம் ஊர் தாகம் தீர்க்க நாம் பிறந்து தவழ்ந்த மண்ணைக் காத்துவிட பார் எல்லாம் பரவி வாழும் பாசத்து எம் ஊர் உறவுகளே பாரே வியக்கும் வண்ணம் எம் ஊரைப்  பட்டணமாய் மாற்றிட பாசாங்கில்லாத பாசத்துடன் உதவிடுங்கள்.

மறவன்புலோவிலிருந்து ஜெயந்தி

Updated: August 26, 2014 — 11:47 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme