ஊரை மறந்த நானுமோர் மிருகம்தான்

image

என் தாயின் வயிற்றில் பத்துமாசம் திரிந்தேன் என்னூரில்
பத்து நிமிடம்கூட என் சிந்தனையிலில்லை இப்போது என்னூர்
படித்தேனாம் பாடசாலையில் பழைய
புகழ்பாடும் உனக்கு இப்போதேன் பள்ளிக்கூடம்
அதிகாலை தானெழுந்து ஆலயம்தான்
தினம் சென்றாய் இப்போது கடவுள் எங்கேயென்றாய்
முகவரியே தெரியாதவுனக்கு முகநூல்
ஒரு கேடாம்
அதில்வேறு மூன்று வரி status ம்
பிறந்த ஊரும் என் தாய் என்று
இறுதியிலே
ஊருக்கோர் உதவியென்றால்
அங்கேயோர் கொள்ளை கோஷ்டியென்றாய்
பகுத்தறிவில்லா மனிதன் கூட
ஒரு மிருகம்தான்
நானுமோர் மிருகம்தான்

By கலைஞன்(Canada)

Updated: July 31, 2014 — 1:39 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme