மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் பட்டமளிப்பு விழாப் படங்கள் இணைப்பு.

கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தினரால் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு 23.12.2012 அன்று காலை 11.00 மணியளவில் கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பட்டமளிப்பு நிகழ்வானது கற்பகம் பல்கலைக்கழக  துணைவேந்தர் முனைவர் க. பாலசுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் இரா. வசந்தகுமார்  அவர்களும்    சிறப்புவிருந்தினராக உயர்நீதிமன்ற நீதியரசர் வி. இராமசுப்பிரமணியம் அவர்களும்  கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொழிலதிபர் க. கஸ்தூரிரங்கன், இந்தியன் ஓவர்சீஸ்வங்கித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ம. நரேந்திரா,   ஐக்கிய நாடுகள் சபை மேனாள் ஆலோசகர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகிய மூவருக்கும் மதிப்புறு முதுமுனைவர்  (Honoris Causa D. Sc.)  பட்டம் வழங்கப்பட்டது.

இப்பட்டமளிப்பு விழாவில்  கற்பகம் பல்கலைக்கழக மாணவர்  உட்பட மொத்தமாக 2000 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

—துஷ்யந்தன்—

Updated: December 29, 2012 — 2:01 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme