மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!! உப்பளம் வேண்டாம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்புப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தனியார் உப்பளத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதேச கடற்கரைப் பிரதேசங்களைச் சேர்ந்த 9 மீனவ சங்கங்களும், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 4 மீனவ அமைப்புக்களும் இணைந்து யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையாடு செய்துள்ளனர்.

“தனங்கிளப்புப் பகுதியில் புதிதாக தனியார் உப்பளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. தனங்கிளப்பு, கச்சாய், நாவற்குழி, பெரியமாவடி, கொயிலாகண்டி, மீசாலை, கெற்பெலி, மறவன்புலவு, கிலாலி, புலோப்பளை, அல்லிப்பளை கிழக்கு,கோவிந்தபுல கிராமங்களை அண்டிய 200 ஏக்கர் பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500 மீனவர்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

கடல் மற்றும் அதனை அண்டிய பரப்பும் அதிக உவர்த்தன்மையாக மாற்றமடைந்து வருகிறது. . கண்டல் தாவரங்கள் அழிவடைந்து விட்டன. இதனால் கடல்வாழ் மீனினங்கள் இறந்து, கரையொதுங்கி வருவதுடன், கடல்வாழ் உயிரினங்கள் முற்றாக அழிவடையும் நிலமை ஏற்பட்டுள்ளது.

குடி தண்ணீர் மேலும் வற்றுவதுடன், உவர்த்தன்மையும் அடைந்து விடும். விவசாய நிலங்கள் உவர் தரவைகளாக மாற்றமடையும். மக்கள் இடம்பெயரும் நிலமை ஏற்படும். எனவே இங்கு உப்பளத்தை அமைக்க வேண்டாம்.

இது தொடர்பாக சாவகச்சேரி பிரதேச செயலருக்கும் மனுக் கையளித்தோம். அதன் பிரதிகள் மாவட்ட செயலர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம்.“ என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Updated: February 3, 2019 — 11:20 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme