இலங்கை போக்குவரத்துச்சபை சாரதிக்கும் கொடிகாமம் யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சாரதிக்குதனியாஸ் பஸ் சாரதிக்கும் இ.போ.சபை சாரதிக்கும் இடையில் மோதல்.
இலங்கை போக்குவரத்துச்சபை சாரதிக்கும் கொடிகாமம் யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சாரதிக்கும் இடையில் இன்று (18) மதியம் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பஸ் நிலையத்தில் சம்பவம் நடைபெற்றதாகவும் இலங்கை போக்குவரத்துச்சபை சாரதி செய்த முறைப்பாட்டினை அடுத்து கொடிகாமம் பகுதியில் வைத்து பயணிகளை இறக்கியதன் பின்னர் தனியார் பஸ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.