தென்மராட்சியில் இலவச மருத்துவமுகாம்

தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற இலவச மதுத்துவமுகாம் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசத்தினை அண்டிய ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இராணுவத்தினருடன் தென்னிலங்கை மருவத்துவர்கள் குழுவினர் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டிஆராய்சி மற்றும் சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

காய்ச்சல் மற்றும் வாந்திபேதி தோல் நோய் கண் பார்வை உள்ளிட்ட பல நோய்களுக்கான மருத்துவ சோதனைகளும் மருந்துகளும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

Updated: January 17, 2018 — 5:00 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme