ரயிலுடன் மோதி கறவைப் பசு உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி புகையிரதம் கறவை பசு ஒன்றுடன் மோதியதில் பசு சம்பவ இடத்திலேயே உயிர்பிரிந்த சம்பவம் நேற்று (16) காலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது.

சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் மகாவத்தியாலயத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. புகையிரதம் மோதி தூக்கி வீசிய பசுமாடு பேரூந்துக்காக காத்திருந்த மாணவி ஒருவர் மீது விழுந்ததில் மாணவி காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated: January 17, 2018 — 4:31 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme