சரசாலை ஶ்ரீ கணேச வித்தியாலயத்தின் கால்கோள் விழா

யாழ்ப்பாணம் சரசாலை சாவகச்சேரி ஶ்ரீ கணேச வித்தியாலயத்தின் கால்கோள் விழா இன்றைய தினம் காலை 9:00 மணியளவில் வித்தியாலய அதிபர் ம.தர்மசீலன் தலைமையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சி.சிவதாசன் கலந்துகொண்டார்.சிறப்பு விருந்தினராக சரசாலை வடக்கு பாலர் முன்பள்ளி ஆரம்ப கர்த்தா த.சபாநாயகம் கௌரவ விருந்தினராக சரசாலை வடக்கு பாலர் முன்பள்ளி ஆசிரியர் இ.சோபினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலையில் பிரதம விருந்தினர் உரையாற்றுகையில் கடந்த வருடம் முதலாம் வகுப்பில் ஒருமாணவரும் பாடசாலையில் இணையவில்லை இதனால் பாடசாலை கீழ் நோக்கி சென்றது. ஆனால் இம்முறை வித்தியாலய அதிபரின் முயற்சியில் ஏழு மாணவர்களை இணைத்திருப்பது பாடசாலையின் வழச்சிக்கு நோக்கி செல்கின்றது என்றார்.

 

Updated: January 15, 2018 — 10:51 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme