கொழும்பிலிருந்து யாழ் குடாநாடு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பற்றிக் கொண்டதில் புகையிரதத்தின் பயணம் சற்றே தடைப்பட்டிருந்தது. இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புறப்பட்ட புகையிரம் மதியம் 12.30 மணியளவில் சாவகச்சேரி மீசாலை புத்தூர் பகுதியை கடந்து செல்லும்போது இயந்திரம் தீபற்றிக்கொண்டதனை அடுத்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் புகையிரதத்தினை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததனை அடுத்து பொறியலாளர்களின் சிபார்சின் பின்னர் யாழ் புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.