சகலகலாவல்லி கால்கோள் விழா


மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் கால்கோல்விழா நிகழ்வு இன்றயதினம் (15) பாடசாலை அதிபர் வை.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. 2018ம் ஆண்டில் புதிதாக பாடசாலையில் இணைந்துள்ள மாணவச்செல்வங்களை மாலைபோட்டு வரவேற்கும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூகசேவையாளர் லயன்.எம்.ஆர்.கிருபாகரன் கலந்து கொண்டார்.


இங்கு உரையாற்றிய விருந்தினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தினரும் மற்றும் பாடசாலை அதிபர் அவர்களும் விடுத்த வேண்டுகோளின் பேரில் நான் இங்கே விருந்தினராக கலந்து கொண்டிருக்கின்றேன். சில கோரிக்கைகளை என்னை அழைத்தவர்கள் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள். எனது லயன்ஸ் கழக நண்பர்களுடன் கலந்துரையாடி இந்த பாடசாலையில் குறைபாடாக காணப்படும் பௌதீகள வழங்களை சரிய செய்ய முயற்ச்சி எடுப்பேன் என்று தெரிவித்தார்.

Updated: January 15, 2018 — 10:12 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme