சிறுதானிய பயிர்செய்கை கூட்டம் சகலகலாவல்லி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மறவன்புலோவில்

 

மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் நெற்பயிர்செய்கை முடிந்ததன் பிற்பாடு விவசாயிகள் தமது நிலங்களில் பயறு உழுந்து கௌப்பி உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிட்டு இலாபம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள் வேண்டும் என்றும் அதற்காக தமது அமைச்சு உழவு செய்வதற்கான வசதிகளை குறைந்த செலவிலேயோ அல்லது இலவசமாகவோ விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட கமக்கார அமைப்பின் தலைவர் திருஞானசம்பந்தர் கடந்த ஆண்டும் இம்முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டு கால்நடைகளை மக்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காததன் காரணமாக அது தோல்வியில் முடிந்தது என்றும் இம்முறை அதனை கட்டுப்படுத்துவதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச செயலர் வளிமுறைகளை ஏற்படுத்தித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

Updated: January 12, 2018 — 7:59 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme