மறவன்புலோ மேற்கு புண்ணியனார்வளவு முனியப்பர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

மறவன்புலோ மேற்கு புண்ணியனார்வளவு முனியப்பர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. கடந்த 7ம் திகதி அதிகாலை 5 மணிமுதல் மாலை 2.30 மணிவரை நிடைபெற்ற நிகழ்வினை இரத்தினம் விக்னேஸ்வராசா அவர்கள் தலைமைதாங்கி நடாத்திவைத்தார். நிகழ்வின் முடிவில் திருவாசக முற்ஓதல் புரிந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மறவன்புலோ மேற்கு சாலாவயற்பிள்ளையார் ஆலய ஓதுவார் திரு.மாணிக்கம் லீலாவினோதன் மறவன்புலோ நித்தர்புலம் முத்துமாரி அம்மன் ஆலயத்தை சேர்ந்த செ.ஆனந்தரஞ்சன், மறவன்புலவு மத்தி நரசிங்க வைரவர் ஆலயத்தை சேர்ந்த திருமதி வேலாயுதம்பிள்ளை சியாமிளாதேவி, மற்றும் ப.கருணாதேவி, மறவன்புலோ கிழக்கு ஒளிசுட்டான் மற்றும் மணற்காட்டு முருகன் ஆலய ஓதுவார் திருமதி.சிவராசா சுப்புலட்சுமி, கைதடி நாவற்குழி தெற்கு பரும்படை அம்மன் கோவில் ஓதுவார் திரு.சிவலிங்கம், கண்டாவளை பற்றிக்காட்டான் பிள்ளையார் ஆலய ஓதுவார் இரத்தினம் கையிலாயபிள்ளை துணைவியார் நகுலேஸ்வரி ஆலய பூசகர் கந்தையா ஆகியோர் திருவாசக முற்றுஓதினர்.

Updated: January 15, 2018 — 4:02 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme