வடமாகணசபை உறுப்பினர் சி.அகிலதாஸ் போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு.

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்திற்கு புதிய போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றினை வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து இன்று (06.12.2017) வழங்கி வைத்துள்ளார்.

.

பழைய மாணவர் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த புதிய இயந்திரத்தினை வழங்கி வைத்தார். இதுவரை காலமும் பாடசாலை சமூகம் தனது தேவைகளுக்காக சாவகச்சேரி நகரில் சென்று நிழல்பிரதி எடுக்கும் நிலை காணப்பட்டது. ஆயினும் கௌரவ அகிலதாஸ் சிவக்கொழுந்து அவர்களினால் இன்றயதினம் எம்மத்தியில் காணப்பட்ட பாரிய பிரச்சினைக்கு தீர்வு கிட்டியிருப்பதாக பாடசாலை அதிபர் திரு.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

மாணவர்களினது கல்வி நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் அவர் செய்த இந்த உதவியினை பாடசாலை சமூகம் வரலாற்றில் மறக்கமாட்டாது என்றும் குறிப்பிட்டார். இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட குறித்த பாடசாலை முற்றாக அழிவடைந்த நிலையில் பௌதீக வழங்கள் ஏதும் இல்லாத நிலையில் தாம் பொறுப்பேற்றுக் கொண்டபோதும் பழைய மாணவர்களினது முழு முயற்சியினால் இன்று நகரப்பாடசாலைகளின் தரத்திற்கு எமது பாடசாலை வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸின் சேவைகளை ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையில் பார்க்க கூடியதாக இருப்பதாக தெரிவித்த அவர் சிறந்த சேவையினை அவர் ஆற்றுவதையிட்டு மகிழ்ச்சி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும் பல ஆண்டு காலம் சேவையாற்ற இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்தார். பாடசாலையின் அதிபர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து மறவன்புலோ கிராமத்தினை மையப்படுத்தி தாம் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக அண்மையில் மறவன்புலோ கிழக்கு செம்மங்குண்டுகுளம் சவரியன்குண்டு, மறவன்புலோ வடக்கு திரிவிக்கிராய் குளம் ஆகியவற்றிக்கு பல மில்லியன்ரூபாய்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்திருந்தேன். அதேபோன்று மேலும் இரண்டு கிணறுகளை புனரமைப்பதற்கும் என்னால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இவை இந்த மறவன்புலோ மக்களுக்கு தெரியுமோ தெரியாது. அதனால் இச்சந்தர்ப்பத்தில் இதனையும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டிருக்கி;ன்றேன்.

இன்று இப்பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றினை வழங்கியிருக்கின்றேன். அடுத்த ஆண்டிலும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய என்னால் ஆன அனைத்து உதவிகளையும் வழங்கி வைப்பேன். தொடர்ந்தும் மறவன்புலோ கிராமத்திற்கு உதவி செய்வேன் என்ற உறுதி மொழியுடன் செல்கின்றேன் எனத் தெரிவித்தார்.

Updated: December 6, 2017 — 12:03 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme