சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒளிபரப்பாக செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றது. தாக்கியவர்கள் CP _ QE 4876 பச்சை கலர் ஆட்டோவில் மிகுந்த மதுபோதையில் காட்டுதனமாக தாக்குதலில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்களும் அவதானித்துள்ளனர்.

அத் தருணத்தில். பள்ளி வாசலில் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இரண்டு முஸ்லிம் அன்பர்கள் ஊடகவியாளரை பாதுகாக்க முற்பட்ட போது அவர்களும் . ஆட்டோவில் வந்த மர்ம நபர்களால் பியர் மதுபோத்தலால் தாக்கப்பட்டார்கள்.

ஆட்டோவில் வந்த நபர்கள் அரசியல் ஆதிக்கம் உள்ள நபர் ஒருவரின் பெயரை அத் தருணத்தில் பயன் படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆட்டோவில் தப்பிவிட்டார்கள் . இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.மனோகரன் என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டவராவார்.

Image may contain: 1 person, close-up

Updated: December 3, 2017 — 11:55 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme