கனடாவில் தத்தளிக்கும் அகதிகளுக்கு உதவும் யாழ். இளைஞன்!

கனடாவில் வேலையின்மை மற்றும் குறைந்த ஊதியங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் புலம்பெயர் அகதிகளுக்காக வாதாட வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் அகதிகளுக்காக, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த நீதன் ஷான் (நீதன் சண்முகராஜா) என்ற தமிழ் இளைஞனே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் புகலிடம் கோரியுள்ள அகதிகள் சமாளிக்கும் பிரச்சினைகளுக்கு உதவவுள்ளார் என கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நீதன் ஷானின் நியமனம் வரவேற்புத் தலைவரால் அண்மையில் டொரண்டோ நகர சபை கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட நிலையில் 16 வயதில் நீதன் ஷான் கனடாவுக்கு சென்றுள்ளார். இதனால் தான் வாழ்ந்த அனுபவத்தையும், தொழில்முறை அனுபவத்தையும் வைத்து சிறப்பாக செயற்பட முடியும் என நீதன் ஷான் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளாக வந்தவர்களில் ஒருவர், இதே போன்ற சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மற்றவர்களுக்கு உதவும் மன நிலையை கொண்டிருப்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

டொரான்டோ Newcomer அலுவலகம் மற்றும் பிற குழுக்களுடனும் இணைந்து பணியாற்றி குடியேறுபவர்களுக்கு வாய்ப்புகளை மேம்படுத்த முயற்சிப்பதாக ஷான் கூறுயுள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு நீண்டகால, தரமான வேலைவாய்ப்புகளை கண்டறிய நீண்ட காலம் எடுக்கும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக ஷான் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களுக்கு அமைய டொரொன்டோவில் வாழும் 46.1 சதவீதமானோர் கனடாவுக்கு வெளியே பிறந்தவர்களாகும். 2011 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 350,000 க்கும் அதிகமான மக்களை வரவேற்ற நகரமாக டொரான்டோ உள்ளது.

2014 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களுக்கமைய 2009 ஆம் ஆண்டு முதல் கனேடிய அனுபவ வகுப்பு பிரிவின் கீழ் வந்திருந்த புலம்பெயர்ந்தோர் 50,000 டொலர் வரை வருடாந்தம் வருமானமாக பெற்றுள்ளனர்.

நான் நகர சபைக்கு அழுத்தம் கொடுக்கிறேன், வேலையற்றவர்களின் சார்பாக என்னால் கேள்விகளை கேட்க முடியும் என ஷான் குறிப்பிட்டுள்ளார்.

Updated: November 26, 2017 — 11:58 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme