டென்மார்க் அரசியலில் சாதித்த இலங்கைத் தமிழர்!

டென்மார்க் நாட்டின் தேசிய அரசியலில் எதிர்க்கட்சியாகவுள்ள சமூக ஜனநாயகக்கட்சி சோணபோ நகரசபையின் ஆளும் கட்சியாகவிருக்கின்றது.சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கணேஸ்வரன் சண்முகரத்தினம் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக நகரசபை உறுப்பினராகியுள்ளார்.31 உறுப்பினர்களைக் கொண்ட சோணபோ நகரசபையில் 6 வது அதிகூடிய வாக்கைபெற்றவராக திரு கணேஸ்வரன் திகழ்கிறார்.கிளிநொச்சி வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட கணேஸ்வரன் சண்முகரத்தினம் தனது ஆரம்பக் கல்வியை கிளி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையில் தொடங்கினார்.யாழ் ஸ்கந்தவரோதையா, வசாவிளான் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கற்றுள்ளார்.கிளிநொச்சி மத்திய கல்லூயில் உயர்தரத்தை பூர்த்திசெய்து 1990 ஆம் ஆண்டு டென்மாக் சென்றார்.அங்கு இயந்திர தொழில்நுட்பவியலாளராக கற்றுத்தேர்ந்து பணியாற்றுவதுடன் சுயதொழில் முனைவோராக வர்த்தக நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறார்.இலங்கையில் அரசியல் காரணங்களினால் சிதைக்கப்பட்டு உலகின் பலபாகங்களில் ஏதிலிகளாக குடியேறிய தமிழர்கள் தமது முயற்சியில் அரசியல் பொருளாதாரம் கல்வி கலை போன்றவற்றில் தடம்பதிப்பது தமிழினத்துக்கு பெருமையைத் தேடித்தருகிறது என்றால் அது மிகையாகாது.

Updated: November 26, 2017 — 11:06 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme