சந்திகளில் கூடுபவர்கள் கும்பலாக மோ.சைக்கிள்களில் செல்பவர்களை விசாரிக்க பொலிஸாருக்கு உத்தரவு.

“வடக்கு மாகாணத்தில் சந்திகளில் கூடிநின்று அரட்டை அடிப்பவர்கள், கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை விசாரணை நடத்தவேண்டும். இரவு வேளைகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்” இவ்வாறு வடக்கிலுள்ள அத்தனை பொலிஸ் நிலையங்களுக்கும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார்.

வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட ஆகுதியான மறவர்களுக்கான நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாகத் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து இந்த உத்தரவு தமக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் வாள்வெட்டுக் கும்பல்கள் துணிச்சலுடன் பிரதான வீதிகளில் பயணித்து தாக்குதல்களை நடத்திச் செல்கின்றனர்.

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியை 24 மணிநேரத்துக்குள் வெளியிட்டு சந்தேகநபரை 48 மணிநேரத்துக்குள் கைது செய்த பொலிஸ உயர்மட்டத்தால் 4 தினங்களாகத் தொடரும் வாள்வெட்டுக் கும்பல்களை ஏன் அடக்கமுடியவில்லை என மக்கள் மத்தியில் எழும் சந்தேகத்திலும் நியாயமுண்டு.

Updated: November 18, 2017 — 9:08 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme