மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

தனங்கிளப்பு, மறவன்புலோ சாவகச்சேரி மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் 18/08/2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

18/08/2017 வெள்ளிக்கிழமை திருவாதிரை நட்சத்திரமும், ஏகாதசி திதியும், சித்தயோகமும் கூடிய சுப வேளையில் காலை 09:00 மணிக்கு ஆரம்பமாகி ஆவணித்திங்கள்  11ம் நாள் 27/08/2017 ஞாயிற்றுக்கிழமை காலை சங்காபிசேகமும் மாலை திருக்கல்யாணமும் நடைபெற்று அலங்கார உற்சவம் நிறைவுபெறும்.

பிரதம குரு- சிவாகம கிரியா பூசணம் பிரம்மஶ்ரீ லம்போதர குருக்கள்

ஆலய குரு- கஜரூபசர்மா

பூமாலை அலங்காரம் – இ.தங்கராசா

மங்கல வாத்தியம்- விநாயகமூர்த்தி குழுவினர்.

திருவிழா விபரம்

01ம் திருவிழா 18/08/2017 வெள்ளிக்கிழமை சி.திருஞானசம்பந்தர் குடும்பம்

02ம் திருவிழா  19/08/207 சனிக்கிழமை  சி. அருளானந்ததேவன் குடும்பம்

03ம் திருவிழா  20/08/2017 ஞாயிற்றுக்கிழமை  க.கிருஸ்ணமூர்த்தி குடும்பம்

04ம் திருவிழா 21/08/2017 திங்கள் இ.மாணிக்கவாசகர் குடும்பம்

05ம் திருவிழா 22/08/2017 செவ்வாய்க்கிழமை  தி.மகாலிங்கம் குடும்பம்

06ம் திருவிழா 23/08/2017 புதன்கிழமை சு.யோகநாதன் குடும்பம்

07ம் திருவிழா 24/08/2017 வியாழக்கிழமை ச.திருநாவுக்கரசு குடும்பம்

08ம் திருவிழா  25/08/2017 வெள்ளிக்கிழமை  சு. கனகரத்தினம் குடும்பம்

09ம் திருவிழா 26/08/2017 சனிக்கிழமை து. மாணிக்கவாசகர் குடும்பம்

10ம் திருவிழா 27/08/2017ஞாயிற்றுக்கிழமை காலை- வி.செல்லப்பா குடும்பம்

                                                 திருக்கல்யாணம்    மாலை- பொ. குலேந்திரன் குடும்பம

வைரவர்சாந்தி 28/08/2017 திங்கள்கிழமை திருமதி செல்வராசா குடும்பம்

அடியவர்கள் ஒவ்வொருநாளும் நடைபெறும் அபிசேகங்களிலும் , பூசைகளிலும் தொடர்ந்து நடைபெறும் மகேஸ்வர பூசைகளிலும் பங்குபற்றி திருவிழாக்காலங்களில் தேவைப்படும் பால், இளநீர், தயிர், பூக்கள் போன்ற ஏனைய பொருட்களையும் வழங்கி முருகப் பெருமானின் திருவருளை பெற்றுய்யும்வண்ணம் வேண்டிக்கொள்கிறோம்.

இவ் நிகழ்வுகள் யாவையும் மறவன் தொலைக்காட்சி http://www.maravantv.com/, மறவன்புலோ முகநூல் https://www.facebook.com/maravanpulo.web , மறவன்புலோ யூரிப் தளம் https://www.youtube.com/channel/UCHpbqC6GTrCWr26Mtsr5NWQ, மற்றும் மறவன்புலோ இணையத்தில் http://www.maravanpulo.com/நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படும்.

Updated: August 24, 2017 — 10:12 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme