ஆகஸ்டில் உயர்தரப் பரீட்சை!!

2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட்­ மாதம் எட்டாம் தகதி ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை அதே மாதம் இரு­பதாம் திகதி நடைெ­ப­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல் செப்­டெம்­பர் மாதம் இரண்டாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள க.பொ.த.உயர் தரப் பரீட்­சைக்கு இம்முறை மூன்று இலட்­சத்து பதி­னை­யா­யி­ரத்து 227 பேர் தோற்­ற­வுள்­ளனர்.

அவர்களுள் இரண்டு இலட்­சத்து முப்­பத்­தே­ழா­யி­ரத்து 943 பேர் பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளா­வர்.

கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்­சைக்­காக நாடு தழு­விய ரீதியில் 305 பரீட்சை இணைப்பு நிலை­யங்­களும் இரண்­டா­யி­ரத்து 230 பரீட்சை நிலை­யங்­களும் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Updated: July 7, 2017 — 6:22 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme