மஹா கும்பாபிஷேகம்

சாவகச்சேரி, தனங்கிளப்பு ,மறவன்புலோ, மணற்காடு காரையான்புற்று   கந்தசாமி புனராவர்த்தன  அஷ்டபந்தன ஏககுண்ட பஷ்ட  மஹா கும்பாபிஷேகம் 05/07/2017 எதிர்வரும் புதன்கிழமை  நடைபெறவுள்ளது.

முருகப்பெருமான் மெய்யடியார்களே!

05/07/2017 புதன்கிழமை காலை 8:59 மணிமுதல் 10:47 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ திருவருள் கைகூடியுள்ளது,

03/07/2017 திங்கள்கிழமை காலை 6:00 மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி மாலை 3:00 மணிக்கு தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், பிரம்பஸ்தாபனம் நடைபெறும்.

மறுநாள் 04/07/2017 செவாய்க்கிழமை  காலை 9:00 மணிமுதல் 4:00 மணிவரை எண்ணெய் காப்பு சாத்துதல் இடம்பெறும்.

05/07/2017 புதன்கிழமை காலை 7:00 மணிமுதல் ஆரம்பமாகி துவாதசி  திதியும், அனுஷ நட்ஷத்திரமும், சித்தாமிர்தயோகமும், சிங்கலக்கினமும் கூடிய காலை 8:59 மணிமுதல் 10:47 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ திருவருள் கைகூடியுள்ளது. ஆகவே அடியார்கள் அனைவரும் அபிஷேகத்துக்கு தேவையான பால்,தயிர்,நெய்,இளநீர்,பழம்,பூக்கள் கொண்டு வந்து கிரியைகள் மற்றும் பூஜைகள், மகேஸ்வர பூஜை( அன்னதானம்) ஆகியவற்றில் கலந்துகொண்டு முருபெருமானின் திருவருட்கடாஷ்சத்தை பெற்றுய்வீர்களாக.  

  தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெறும்.

 

Updated: June 25, 2017 — 9:41 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme