தென்மராட்சி சிறுவர்கள் நலம் காப்போம் – வேள்விஷன் பொதுமக்கள் சந்திப்பு

தென்மராட்சி சிறுவர்களின நலன்களை பாதுகாக்க வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ் நகரில் அமைந்துள்ள ரில்கோ நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது


சிறுவர் சமுதாய ரீதியில் பாதிக்கப்படும் சந்தர்பங்கள், போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகள் தோடர்பில் கலந்து கொண்ட சமூக அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்

மறவன்புலவு கிராம மக்கள் சார்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தின்பொருளார் சி.முரளி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் கலந்துகொண்டார்

நாவற்குழி முதல் கேரதீவு வரையான நிலப்பரப்பில் நன்நீர் ஊற்று இல்லாததன் காரணமாக குறித்த பகுதி மக்கள் குடிநீர் பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் நீர்தேக்கங்கள் புனரமைக்க படாமையால் மழை நீர் கடலுக்குள் செல்கின்றது இதனால் வரட்சி ஏற்பட்டு ஆடு மாடுகள் கூட தாகத்தை தணிக்க ஏங்குவதாக மறவன்புலவு கிராம அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்த முரளி தெரிவித்தார்
மக்களின் அடிப்படை பிரச்சினையில் ஒன்றான நீர் பிரச்சினையை விசேட திட்டம் மூலம் நிறைவு செய்ய வேள்விஷன் முன்வர வேண்டும் என கேட்டு கொண்டாா்

நிகழ்வின் முடிவில் சிறுவர்களின் வாழ்வு நிறைவான வாழ்வாக அமைய வேண்டும் என பிராத்தித்து மெழுகு திரி தீபம் ஏற்றப்பட்டது

Updated: June 4, 2017 — 4:41 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme