மறவன்புலோ கிழக்கு மணற்காடு கந்தசுவாமி ஆலய திருவெம்பாவை இறுதி நாள் உற்சவம்.

மறவன்புலோ கிழக்கு மணற்காடு கந்தசுவாமி ஆலய திருவெம்பாவை இறுதி நாள் உற்சவம் இன்று நடைபெற்றது.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.

திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது “எம்பாவாய்” என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.

.

சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை ‘திருவெம்பாவை’ விளக்குகிறது.

அந்த வகையில் பத்துநாட்கள் நடைபெற்ற திருவெம்பாவை உற்சவத்தில் இந்த கிராம மக்கள் கலந்து முருகப்பெருமானின் திருவருளை பெற்றார்கள்.இன்றைய இறுதி உற்சவத்தின் போது பக்தர்கள் காவடி,பாற்செம்பு,கற்பூரசட்டி எடுத்து நேர்த்திகடன்களை நிறைவேற்றினார்கள்.

 

Updated: January 11, 2017 — 5:36 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme