87 இலட்சம் பெறுமதியான கஞ்சா பருத்தித்துறையில் பிடிபட்டது-மூவர் கைது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ள தாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமாசிங்க தெரிவித்துள்ளார்.
 இச்சம்பவமானது இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் இடம்பெற்று ள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை செய்தபோது அப் படகில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
1480349557_unnamed.jpg
இதனையடுத்து குறித்த கஞ்சா மற்றும் அதனை கடத்தி வந்த பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியை சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 50கிலோ கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சாவின் மொத்த பெறுமதியானது இலங்கை பெறுமதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா  என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள்  பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமாசிங்க தெரிவித்தார்.
Updated: November 28, 2016 — 8:24 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme