அன்றும் இன்றும்.

 

பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்ததும்,மழலைமொழி பேசி மண்வீடு கட்டியதும்,நண்பனோடு கைகோர்த்து நகைச்சுவையாகபேசியதும்,
ஆற்று நீரில் மீன்பிடித்து மீண்டும் அதை நீந்தவிட்டு ரசித்ததும்,
துள்ளித்திரிந்து பறந்து திரியும் தும்பி பிடித்து வாலில்நூல் கட்டிபறக்கவிட்டதும்,
பள்ளி சென்று பாடம்படித்ததும்,புத்தகத்தில் மயிலிறகை மறைத்துவைத்து பவுடர் போட்டதும்,ஊர்த்திருவிழாவில் தொலைந்ததும்
நண்பனோடு ஊர்சுற்றி அம்மாவிடம் அடிவாங்கியதும்,
பரீட்சையில் புள்ளிகுறைந்து அப்பாவிடம் திட்டுவாங்கியதும்,
வீட்டுப்பாடம் படிக்காமல் ஆசிரியர் முட்டிபோடவைத்ததும்,சகோதரருடன சண்டைபோட்டு சமாதானமாவதும்,
ஆசையுடன் ஐஸ்பழம் உறிஞ்சுவதும்,
பக்கத்து வீட்டில் மாங்காய் பறித்து உப்புத்தூள் தூவி ருசிப்பதும்,இத்தனையும் செய்த பாலகப்பருவம் தாண்டி
இளமைப்பருவம் வந்தது.
நட்பு காதல் ஆசை கனவு இத்தனையுந்தாண்டி
படித்துமுடித்ததும் நல்லதோர் வேலை தேடி நாலுகாசு உழைக்க
ஊருவிட்டு ஊருவந்து ஒற்றையில் தவிக்கும் உள்ளங்கள் கோடி
அதிலும் நாடுவிட்டு  நாடுவந்தோர் தாராளம்,
வெளிநாடு எனும் சொர்க்கபூமியில்
குளிருமில்லை வெயிலுமில்லை,
பசியுமில்லை தாகமில்லை
உயிர்வாழ வேண்டுமென்பதற்காய் உண்ண வேண்டும்.நல்லது கெட்டது ஒரு தொலைபேசியில் முடிந்துவிடும்.
நள்ளிரவில் நண்பர்கூட்டம் முகநூலில் நலவிசாரிப்பு
இதுதான் இன்றைய பொழுதுபோக்கு.
பத்துமணித்தூக்கம் நாலுமணிநேரமானது
மூன்றுவேளை உணவு ஒருவேளையானது.தெரிந்த மொழி மறந்து தெரியா மொழி தடுமாறியது.
ஊரைப்பார்க்க மனசு தவிக்கும்,
ஊரிலுள்ள உறவுகளுக்காய் மாடாய் உழைப்போம்.
இதுதான் எமக்கு நிரந்தர வாழ்க்கை.
ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்தை
ஒருகணம் திருப்பிப்பார்தால்,
ஏக்கமும் கண்ணீரும் மட்டுமே மிச்சமாய் இருக்கும்.
சுதாகரன் ராஜிதா.
(சுவிஸ்)

Updated: February 6, 2016 — 9:47 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme