இயற்கையை காத்திடுவோம்.

சென்னையில் பேய் மழை
சீரழிந்தது மக்களின் அன்றாட வாழ்க்கை
ஏன் என்று சிந்தித்தாயா மானிடா
இயற்கையாக மழை நீர் வழிந்து செல்லும் இடங்களை அடைத்து

2011-01-10 train route col-kandy 1
செயற்கையான கட்டிடங்கள் பல
இவை எல்லாம் கோடிகளைக் கொட்டித்தரும் என்றுகனவு கண்டாயா மானிடா
அதனால்தான் இயற்கை இயற்கையாகவே உனக்குத் தண்டனை தந்ததுபோலும், ஆனாலும் எய்தவன் எங்கோ இருக்க அம்புடன் நொந்து என்ன பலன் பல கோடிகளைக் கொட்டித்தீர்த்தவர்கள் கோடியில் புரள ஏழை,எழியவர்கள் அல்லவா பாதிக்கப்பட்டார்கள்
ஏ மானிடா உனக்குத் தெரியாத கோவர்த்தன மலை அசைத்த கோவிந்தன் இங்கு இல்லை அவர்கூட செயற்கையைக் கண்டு வைகுந்தம் சென்றுவிட்டார்
பிறகேன் நீ ஆசைப்பட்டாய் இயற்கையுடன் செயற்கையாக விளையாட
ஏ மானிடா இனியாவது நீ இயற்கையுடன் விளையாடாதே ஏனென்றால் எஞ்சியிருக்கும் உறவுகளையாவது காப்பாற்ற வேண்டாமா?

சி.ஜெயந்தி.

மறவன்புலோ.

 

Updated: December 10, 2015 — 1:38 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme