Category: செய்திகள்

சகலகலாவல்லி கால்கோள் விழா

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் கால்கோல்விழா நிகழ்வு இன்றயதினம் (15) பாடசாலை அதிபர் வை.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. 2018ம் ஆண்டில் புதிதாக பாடசாலையில் இணைந்துள்ள மாணவச்செல்வங்களை மாலைபோட்டு வரவேற்கும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூகசேவையாளர் லயன்.எம்.ஆர்.கிருபாகரன் கலந்து கொண்டார். இங்கு உரையாற்றிய விருந்தினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தினரும் மற்றும் பாடசாலை அதிபர் அவர்களும் விடுத்த வேண்டுகோளின் பேரில் நான் இங்கே விருந்தினராக கலந்து கொண்டிருக்கின்றேன். சில கோரிக்கைகளை என்னை அழைத்தவர்கள் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள். எனது […]

பொது நோக்கு மண்டபத்தில் பத்திரிக்கை

  மறவன்புலோ கிழக்கு ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தின் சார்பாக அருகாமையில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் வாசகர்களுக்கான பத்திரிக்கையினை பார்வையிடுவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தைத்திருநாளில் எமது கிராமசேவையாளர் தனபாலசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். புலம்பெயர்ந்து வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவரின் நிதி உதவியுடன் பத்திரிக்கை பார்வையிடுவதற்கான மேசை மற்றும் கதிரைகள் என்பன வழங்கப்பட்டதுடன். அருகில் வாழும் வாசகர்களினால் சுழற்ச்சிமுறையில் பத்திரிக்கைக்கான செலவினங்களை வழங்குவதற்கு […]

சிறுதானிய பயிர்செய்கை கூட்டம் சகலகலாவல்லி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மறவன்புலோவில்   மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர் நெற்பயிர்செய்கை முடிந்ததன் பிற்பாடு விவசாயிகள் தமது நிலங்களில் பயறு உழுந்து கௌப்பி உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிட்டு இலாபம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள் வேண்டும் என்றும் அதற்காக தமது அமைச்சு உழவு செய்வதற்கான வசதிகளை குறைந்த செலவிலேயோ […]

மறவன்புலோ மேற்கு புண்ணியனார்வளவு முனியப்பர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

மறவன்புலோ மேற்கு புண்ணியனார்வளவு முனியப்பர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. கடந்த 7ம் திகதி அதிகாலை 5 மணிமுதல் மாலை 2.30 மணிவரை நிடைபெற்ற நிகழ்வினை இரத்தினம் விக்னேஸ்வராசா அவர்கள் தலைமைதாங்கி நடாத்திவைத்தார். நிகழ்வின் முடிவில் திருவாசக முற்ஓதல் புரிந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மறவன்புலோ மேற்கு சாலாவயற்பிள்ளையார் ஆலய ஓதுவார் திரு.மாணிக்கம் லீலாவினோதன் மறவன்புலோ நித்தர்புலம் முத்துமாரி அம்மன் ஆலயத்தை சேர்ந்த செ.ஆனந்தரஞ்சன், மறவன்புலவு மத்தி நரசிங்க வைரவர் ஆலயத்தை சேர்ந்த திருமதி வேலாயுதம்பிள்ளை சியாமிளாதேவி, மற்றும் […]

தென்னிலங்கை வர்த்தகரால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த வர்த்தக பெருமகன் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் நண்பர்கள் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார்;. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் பொதிகளை வழங்கினார். இன்று (09) நண்பகல் 12.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.வை.ஜெயகாந்தன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. தென்மராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம், உதவிக் கல்வி பணிப்பாளர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் […]

வடமாகணசபை உறுப்பினர் சி.அகிலதாஸ் போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு.

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்திற்கு புதிய போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றினை வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து இன்று (06.12.2017) வழங்கி வைத்துள்ளார். . பழைய மாணவர் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த புதிய இயந்திரத்தினை வழங்கி வைத்தார். இதுவரை காலமும் பாடசாலை சமூகம் தனது தேவைகளுக்காக சாவகச்சேரி நகரில் சென்று நிழல்பிரதி எடுக்கும் நிலை காணப்பட்டது. ஆயினும் கௌரவ அகிலதாஸ் சிவக்கொழுந்து அவர்களினால் […]

சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒளிபரப்பாக செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றது. தாக்கியவர்கள் CP _ QE 4876 பச்சை கலர் ஆட்டோவில் மிகுந்த மதுபோதையில் காட்டுதனமாக தாக்குதலில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்களும் அவதானித்துள்ளனர். அத் தருணத்தில். பள்ளி வாசலில் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இரண்டு முஸ்லிம் அன்பர்கள் […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme