Category: செய்திகள்

மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

தனங்கிளப்பு, மறவன்புலோ சாவகச்சேரி மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் 18/08/2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

தனங்கிளப்பில் இருந்து சாவகச்சேரிக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவியந்திரம் மீது துப்பாக்கிச்சூடு.

சாவகச்சேரி வேலாயுதம் வீதியில் மணல் ஏற்றி வந்த உழவியந்திரம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர் அதிகாலை (7) காலை தனங்கிளப்பில் இருந்து சாவகச்சேரிக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திரங்கள் குறித்து விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்திருந்தது. நீண்ட காலமாக தனங்கிளப்பில் இருந்து  வயல்வெளி ஊடாக வேலாயுதம் வீதி வழியாக சாவகச்சேரிக்கு மணல் கடத்தப்பட்டு வந்துள்ளமை குறித்து தகவல் சேகரித்த அதிரடிப்படையினர் இதை முறியடிக்கும் விதமாக அதிகாலை விசேட அதிரடிப் படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். […]

வடக்கு மாகாணத்தில் 349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு- தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27, விவசாயமும் உணவுத் தொழில்நுட்பமும் – 57, வழிகாட்டலும் ஆலோசனையும் – 47, இரண்டாம் மொழி (சிங்களம்) – 78. விளம்பரத்தினை […]

ஆகஸ்டில் உயர்தரப் பரீட்சை!!

2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட்­ மாதம் எட்டாம் தகதி ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை அதே மாதம் இரு­பதாம் திகதி நடைெ­ப­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல் செப்­டெம்­பர் மாதம் இரண்டாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள க.பொ.த.உயர் தரப் பரீட்­சைக்கு இம்முறை மூன்று இலட்­சத்து பதி­னை­யா­யி­ரத்து 227 பேர் தோற்­ற­வுள்­ளனர். அவர்களுள் இரண்டு இலட்­சத்து முப்­பத்­தே­ழா­யி­ரத்து 943 பேர் பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளா­வர். கல்விப்பொதுத் தராதர உயர்தர […]

மஹா கும்பாபிஷேகம்

சாவகச்சேரி, தனங்கிளப்பு ,மறவன்புலோ, மணற்காடு காரையான்புற்று   கந்தசாமி புனராவர்த்தன  அஷ்டபந்தன ஏககுண்ட பஷ்ட  மஹா கும்பாபிஷேகம் 05/07/2017 எதிர்வரும் புதன்கிழமை  நடைபெறவுள்ளது. முருகப்பெருமான் மெய்யடியார்களே! 05/07/2017 புதன்கிழமை காலை 8:59 மணிமுதல் 10:47 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ திருவருள் கைகூடியுள்ளது, 03/07/2017 திங்கள்கிழமை காலை 6:00 மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி மாலை 3:00 மணிக்கு தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், பிரம்பஸ்தாபனம் நடைபெறும். மறுநாள் 04/07/2017 செவாய்க்கிழமை  காலை 9:00 மணிமுதல் 4:00 மணிவரை […]

யாழ்ப்பாண சுண்டிக்குளி மாணவி ஆசிகாவுக்கு முதன்மை அரச கௌரவம்.

இலங்கையின் கனிஷ்ட பிரிவில், முதன்மை வீராங்கனையாக, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சிறந்த வீர, வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு,கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது. இதில், கனிஷ்ட பிரிவில், இலங்கையின் முதன்மை வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டதோடு, இவரின் பயிற்றுநர் விஜயபாஸ்கர், சிறந்த கனிஷ்ட பிரிவினருக்கான பயிற்றுநராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வி.ஆசிகா, மலேஷியாவில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பெண்களுக்கான […]

யாழில் பிடிபட்ட கோடி பணம் திருடிய மோசடி கும்பல்!!

யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர். “அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன், சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme