yjhfgv
Categories
பிரதேசக் கொடி கீதம்
தொன்மை நிறை தென்மராட்சி நன் நிலமிது
துறைதோறும் வாழியவே
தோள் வலியாலே நாளும் உழைப்பவர்
தொழில் நலம் வாழியவே
- தொன்மை
பொன் கொழிக்கும் வளம் பொலிந்து சிறந்து
புகழுடன் வாழியவே
பூரண செல்வம், கல்வி, விளையாட்டு
புதுமை பெற்றோங்கிடவே
- தொன்மை
கடல்வளம், கழனிகள், கரும்பின, மா, தென்னை
கனிசொரி வாழை, பலா
காட்சிக்கினி வள நாடெனப் போற்றிடும்
கற்பகம் வாழியவே
- தொன்மை
உடற்பலம் வீரம் உயர்ந்த மெய் ஞானம்
ஓங்கிய எம் நாடு
இறைவழி பாடோடியலிசை கூத்துகள்
இயங்கும் கலைக் கோயில்
- தொன்மை
எங்கள் தமிழ்க் குல மறவர்கள் வீரம்
எழில்செய் நிலை வாயில்
மங்களம் பாடி மகிழ்ந்து விருந்திடும்
மாண்புறு நன்றாய் இல்
- தொன்மை